DHFL எனப்படும் திவான் வீட்டு வசதி நிதி கழக நிறுவனத்தின் இயக்குநர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 22 கைக்கடிகாரங்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.
யூனியன் பேங்க் இந்தியா உள்பட 17 வங்கிகள் கூட்டமைப்பில் 34 ஆயிரத்து 615 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் DHFL நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீரஜ் வதாவன் தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளியன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், வங்கியில் பெற்ற பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததையும், 55 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த ஓவியங்கள், சிற்பங்கள் வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.