Nothing Phone 1 Launch Offers: உலக மக்களை சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது நத்திங் போன் (1) அறிமுக தகவல்கள். இந்த சூழலில் போன் அறிமுக சலுகையாக HDFC வங்கி கிரெடிட், டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கூடுதல் தகவலாக, போனுடன் சார்ஜிங் அடாப்டர் வழங்கபடாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் நத்திங் போன், ஆப்பிள் ஐபோனுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்று இதன் நிறுவனர் கார்ல் பெய் கூறிவருகிறார்.
5G Adani Group: அம்பானிக்கு ஜியோ… அதானிக்கு? டெலிகாம் துறையில் கால்பதிக்கும் குழுமம்!
போனில் சிறந்த கேமரா, திறன்வாய்ந்த ஸ்னாப்டிராகன் புராசஸர், தரமான டிஸ்ப்ளே, ஒளிரும் விளக்குகள் என பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.
ஆப்பிளின் புதிய Lockdown Mode அம்சம்; இது எப்படி உங்களை பாதுகாக்கிறது என்று தெரியுமா?
போன் (1)ஐ முன்பதிவு செய்ய Flipkart இல் 2,000 ரூபாய் செலுத்தி ஆர்டர் பாஸைப் பெற வேண்டும். இது போனை வாங்கும் செயல்முறைகளை எளிதாக்கும். மேலும், இந்த பாஸுக்காக நீங்கள் செலுத்தும் ரூ.2,000 கட்டணம், போன் வாங்கும்போது அதன் தொகையிலிருந்து கழிக்கப்படும்
நத்திங் போன் 1 அம்சங்கள் (Nothing Phone 1 Specifications)
போனில் திறன்வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் (Qualcomm Snapdragon 778G Plus) 5ஜி புராசஸர் இருப்பது உறுதியாகியுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த போனில் 6.55 இன்ச் அமோலெட் 120Hz டிஸ்ப்ளே இருக்கும்.
போட்டி போட்டு வாட்ஸை ஏத்தும் செல்போன் நிறுவனங்கள் – Infinix Zero Ultra 180W சார்ஜிங் உடன் வருதாம்!
நத்திங் போன் 1 பின்புறத்தில் பிளாக்ஷிப் 50 மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. f/1.88 அபெர்ச்சர், 1/1.56” அளவு சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு கேமராக்கள் கொண்ட அமைப்பு உள்ளது. இரட்டை விதமான OIS உடன் இந்த கேமரா கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நத்திங் போனில் விழிப்பூட்டல்களுக்காக பின்பக்க பேனலில் லைட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போனில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான நத்திங் இயங்குதளம் இருக்கும். இந்த போனின் முக்கிய சிறப்பு இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 இன்ச் திரையில் தடங்கலற்ற மொழுதுபோக்கு – விற்பனையைத் தொடங்கிய OnePlus TV 50 Y1S Pro ஸ்மார்ட் டிவி!
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,500mAh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை ஊக்குவிக்க 45W பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் வழங்கப்படும். ப்ளூடூத் 5.3, டைப்-சி, வைஃபை 6 போன்ற சிறப்புகளும் நத்திங் போனில் இருக்கும்.