விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியள்ள நிலையில், கோபியின் சுயரூபம் புரிந்து பாக்யா வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவதாக ப்ரமோ வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.
கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை எதுவும் தெரியாத பாக்யா கணவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்துகொள்கிறார்.
இதில் கடந்த வார தொடக்கத்தில் கோபி விபத்தில் சிக்கி ஹாஷ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டபோது மனைவி என்று சொல்லி ராதிகா செய்த அனைத்தையும் பாக்யா கண்டுபிடித்துவிட்டார். இப்போது வீட்டிற்கு வந்துள்ள கோபியிடம் பாக்யா கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி வருகிறார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று கோபி விழித்துக் கொண்டிருக்கிறார் இதனிடையே கோபி அப்படியெல்லம் ஒன்றும் செய்திருக்க மாட்டான் என்று அவரது அம்மா ஈஸ்வரி ஸ்ராங்கான சொல்ல, கோபி பழக்குவது ராதிகாவுடன் தான் என்று பாக்யா இன் உண்மையை உடைக்க இருக்கிறார்.
இதனால் குடும்பத்தினர் ஷாக் ஆக அடுத்து என்ன நடக்கும் என்ற பெரிய எதிர்பாப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த வார எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாக்யா எல்லாத்துக்கும் காரணம் ராதிகாதான் என்று சொல்ல உடனே ஈஸ்வரி அவளை பார்க்கும்போதே நினைத்தேன் அவ ஒரு ஏமாத்தக்காரினு என்று சொல்கிறாள்.
ஆனால் இல்ல அத்த உங்க புள்ளதான் பெரிய நடிகர் என்று சொல்கிறாள். அதன்பிறகு உங்க சொந்த குடும்பத்தையே எவ்வளவோ ஏமாத்துனீங்க இதுல உங்களுக்கு என்ன கிடைச்சசுது. நான முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க உங்க வாழ்க்கையை சந்தோஷமா வாழுங்க.
ஆனால் இனியும் ஒரு ஏமாளியா முட்டாளா ஒரு பைத்தியக்காரியா நீங்க சொல்றதை எல்லாம் நம்புறதுக்கு நான் ஒருத்தி இங்கு இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பாக்யா வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும்என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில். அழுது, மனமுடைந்து, உடல் நிலை மோசமான பாக்கியாவை காட்டாமல், இந்த மாதிரி தன்நம்பிக்கை பாக்கியாவை காட்டியது சிறப்பு. வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களுக்கு. என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“