அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
காலேவில் நடைபெற்று வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 554 ஓட்டங்கள் குவித்துள்ளது.
கேப்டன் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் சதத்தை தவறவிட்ட நிலையில், தினேஷ் சண்டிமல் அபாரமாக சதம் விளாசினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோது அதிரடியில் மிரட்ட தொடங்கிய அவர், ஸ்டார்க் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு இரட்டை சதம் அடித்தார்.
இது அவருக்கு முதல் இரட்டை சதம் ஆகும். கடைசி விக்கெட்டாக கசுன் ரஜிதா ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தினேஷ் சண்டிமல் 326 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 206 ஓட்டங்கள் எடுத்தார்.
Innings break: Sri Lanka lead by 190 runs.
Dinesh Chandimal 206*. 🙌#SLvAUS pic.twitter.com/kH1JAjAXUN— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 11, 2022
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 364 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 190 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.