அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி டிவிட் செய்துள்ளார்.
“சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி கே பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.