உலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் மீதும், சொந்த ஊர் மக்கள் மீது எந்த அளவிற்கு அக்கறை வைத்துள்ளார்கள் என்பதற்கு லிங்கிடுஇன் தளத்தில் Fabevy நிறுவனத்தின் தலைவர் வேல்முருகன் செய்த பதிவு ஒன்று போது.
திருநெல்வேலி, சென்னையில் இயங்கிவரும் Fabevy டெக்னாலஜிஸ் நிறுவனம் டெக் சேவைகளை வழங்குவது மட்டும் அல்லாமல் பட்டதாரிகளுக்கு ஐடி துறையில் பணியாற்றுவதற்காகத் தயார் செய்தும் பணிகளைச் செய்து வருகிறது.
4 வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!
வேல்முருகன் சீனி பாண்டியன்
இந்நிலையில் Fabevy டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனரான வேல்முருகன் சீனி பாண்டியன் லிங்கிடுஇன் தளத்தில் தனக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு கால் வந்ததாகவும், அந்த அழைப்பின் மொத்த உரையாடலையும் லிங்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
தமிழர்கள் மத்தியில் டிரென்டிங்
இந்தப் பதிவிற்குத் தற்போது 2900 பேர் லைக் செய்துள்ளது மட்டும் அல்லாமல் தமிழர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. இப்படி அந்தப் பதிவில் என்ன தான் இருக்கு..?
வேல்முருகன்- அமெரிக்கத் தமிழர்
அமெரிக்காவில் இருந்து முக்கியமான ஒருவர் வேல்முருகன் அவர்களை அழைத்துள்ளார். இந்த உரையாடல் தான் இது..
ஹைய் வேல், 3i Infotech Ltd. க்கு hiring லாம் எப்படிப் போகுது?’
குட் சார், இதுவரை 34 பேர் தேர்வாகியுள்ளனர்.
சூப்பர் பா. வேற எதாவது இருக்கா என்று அந்த நபர் கேட்க், வேல்முருகள் ஆமாம் சார் இண்டர்வியூவ் பிராசஸ் பண்ணதுல கொஞ்சம் பேர் நம்ம interview ல ரொம்ப நல்லா பர்பாம் பண்ணாங்க. ஆனா கிளையட் ரவுண்டில் ரிஜக்ட் ஆகிட்டாங்க.அவங்கள கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் ஈசியா வேற நிறுவனத்தில் பணியில் சேர்த்துவிடலாம் எனக் கூறியுள்ளார் வேல்முருகன்.
பயிர்சி கட்டணம்
Fabevy டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இதுபோன்ற பயிற்சி தானே கொடுக்குறீங்க எனக் கேட்டதற்கு, வேல்முருகன் ஆமாம் சார், ஆனால் அவர்களால் training fee கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளனர். என்ன சொன்ன உடனே..
100 பேருக்கு ஸ்பான்சர்
அமெரிக்காவில் இருந்து அழைத்த நபர் அவ்ளோ தானே. நானே ஸ்பான்சர் பன்றேன். மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?, 17 பேர் தான் சார், இவர்களோடு நிறுத்த வேண்டாம் திருநெல்வேலியில் வேலை தேடும் 100 பேருக்கு நான் ஸ்பான்சர் பன்றேன் என அந்த அமெரிக்க வாழ் தமிழர் கூறியுள்ளார்.
TiliconVeli Tech Park -ல ஒரு ப்ளோர்
இந்தப் பயிற்சிக்கு வரும் பசங்க எல்லாம் கோவில்பட்டி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதியில் இருந்து வராங்கா, அவங்களால் எங்க பாவூர்சத்திம் அலுவலகத்திற்குத் தினமும் வர முடியாது சார். அப்போ அவங்களுக்குத் திருநெல்வேலி தான் சரியான இடம் என்று கூறிய அமெரிக்கத் தமிழர் நம்ம TiliconVeli Tech Park -ல ஒரு floor training-க்காக ready பண்ணிடலாம் என்று கூறியுள்ளார்.
ஏன்..?
100 பேருக்கான பயிற்சி செலவு, ப்ரீமியம் ஐடி பார்க்-ல் ஒரு ப்ளோர் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்த அந்த அமெரிக்கத் தமிழரிடம் வேல்முருகன் நீங்க ஏன் இதைப் பண்ணனும்? எனக் கேட்டு உள்ளார்.
திருநெல்வேலி தான் ஊர்
அதற்கு அவர் நான் அமெரிக்காவில் வாழ்ந்து TechFetch.com என்னும் வேலைவாய்ப்பு தளத்தின் நிறுவனர் என்பதோடு மட்டும் அல்லாமல் என்னுடைய ஊர் எப்போதும் திருநெல்வேலி தான். என்னுடைய மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும், திருநெல்வேலியில் குறைந்தது 1000 ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை எனக் கூறியுள்ளார்.
பிரபாகரன் முருகையா
இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் பிரபாகரன் முருகையா இவர் அமெரிக்காவில் TechFetch.com என்னும் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் திருநெல்வேலியில் இருக்கும் Tiliconveli IT Park-ன் நிறுவனர் ஆவார்.
பிரபாகரன் முருகையா-வை தற்போது லிங்கிடுன் தளத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சிறிய நகரங்கள்
இந்தியாவில் தற்போது அனைத்து பெரு நிறுவனங்களுக்கும் சிறிய நகரங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி பல நகரங்களுக்கு ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் செல்ல துவங்கியுள்ளது.
ஸ்டார்ட்அப்
இதற்கு முதலும் முக்கியக் காரணம் தமிழ்நாடு முழுவதும் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாக்கியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். தமிழ்நாட்டில் தற்போது பெரு நகரங்களைத் தாண்டி டவுன் பகுதிகளில் அதிகளவிலான டெக், டிஜிட்டல் சேவைகளை அளிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது.
வெற்றியின் காரணம்..
2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் உருவான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெற்றி பெரு நிறுவனங்கள் வரையில் சென்றடைந்துள்ள காரணத்தாலே தற்போது பெரு நிறுவனங்கள் அனைத்தும் சிறிய நகரங்களுக்குப் படையெடுக்கத் துவங்கியுள்ளது.
காற்றில் இருந்து தண்ணீர்.. லிட்டர் வெறும் 4 ரூபாய் தான்.. அசத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..!
Even I live in America, native is Tirunelveli; wish to create 1000 IT jobs says Prabakaran Murugaiah
Even I live in America, my native is Tirunelveli; wish to create 1000 IT jobs says Prabakaran Murugaiah அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேIT jobs,ருக்கு ஐடி வேலை..!