அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

அதிமுகவில் ஒற்றை தலைமை பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட அரசியல் பரபரப்புக்கு இடையே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக ஒற்றை தலைமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஒற்றை தலைமை பதவிக்காக இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். இதில் இ.பி.எஸ்.க்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே அடுத்த தலைமை என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து கட்சி பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானதை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று கூறி ஒபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்திற்கு இபிஎஸ் சென்ற நிலையில், கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒபிஎஸ் சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிரடி கல்வீச்சு கார் கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் அரங்கேறியது.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிய நிலையில், கட்சி அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டது இந்த சம்பவங்கள் அரங்கேறும்போது கட்சி அலுவலகத்தில் ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் இருந்தார். இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பங்களை தடுக்கும் நோக்கில் அங்கு வந்த காவல்துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஒபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறி அப்பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.