சமையல் ஒரு அழகான பொழுதுபோக்கு. இது நீங்கள் உண்மையிலேயே ரசிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சில சமயங்களில் மிகவும் குழப்பமாக தோன்றும், குறிப்பாக நீங்கள் நேரம் இல்லாமல் இருக்கும்போது. இதுபோன்ற சமயங்களில், சில ஹேக்ஸ் உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும்.
எனவே, உங்கள் சமையலறையை சிறப்பாக பராமரிக்க உதவும் சில கிச்சன் ஹேக்ஸ் இங்கே உள்ளன.
பழைய ஸ்பாஞ்ச்
உங்கள் கிச்சன் ஸ்பாஞ்சை சோப்பு நீரில் சுத்தம் செய்வதன் மூலமோ, டிஷ்வாஷரில் கழுவுவதன் மூலமோ அல்லது மைக்ரோவேவில் சனிடைஸ் செய்வதன் மூலமோ அதன் ஆயுளை நீட்டிக்க முடியும். (குறிப்பு: மைக்ரோவேவில் மெட்டல் உடன் கூடிய ஸ்பாஞ்சை ஒருபோதும் வைக்க வேண்டாம்)
நேச்சரில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வில், பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச், மொராக்செல்லா ஆஸ்லோயென்சிஸ் என்ற பாக்டீரியாவைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. எந்தவொரு கடுமையான உடல்நல அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தாவிட்டாலும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு பாக்டீரியா தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
ஆலோசனை: உங்கள் ஸ்பாஞ்சை தவறாமல் மாற்றவும், அவை துர்நாற்றத்தை உருவாக்கினால் தூர அகற்றவும்.
தேய்ந்து போன கட்டிங் போர்டு
பச்சை இறைச்சி, கடல் உணவு, காய்கறிகள் மற்றும் ரொட்டிக்கு தனித்தனி கட்டிங் போர்டுகளை வைத்திருப்பது பாக்டீரியாவை தவிர்ப்பதற்கான பாதுகாப்பான நடைமுறையாகும்.
ஆனால், காலப்போக்கில் பலகையில் பள்ளங்கள் தோன்றுவது தேய்மானத்தின் அறிகுறியாகும், இது அகற்றப்பட வேண்டும். யுஎஸ்டிஏவின் கூற்றுப்படி, தேய்ந்த கட்டிங் போர்டில் உள்ள பள்ளங்களை நன்கு சுத்தம் செய்வது கடினம், இது உங்களை நோய்வாய்ப்படுத்தும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறலாம்.
பழைய மசாலா
நீங்கள் சுவைகளை ஆராய்வதற்கும், மசாலாப் பொருட்களைப் பரிசோதிப்பதற்கும் விரும்பும் சமையல்காரராக இருந்தால், உங்கள் அலமாரிகளின் பின்புறத்தில் நீங்கள் பயன்படுத்தாத அல்லது ஓரளவு பயன்படுத்திய மசாலாப் பொருட்களை வைத்திருக்கலாம். சில மிகவும் பழைய மசாலாவாகவும் இருக்கலாம்!
முழு மசாலா 2-4 ஆண்டுகள் வரை நீடிக்கும், அதே சமயம் அரைத்தவை அறை வெப்பநிலையில் 2-3 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று USDA பரிந்துரைக்கிறது. அப்படியிருந்தும், மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை மற்றும் நறுமணத்தை இழந்து காலப்போக்கில் பழையதாகிவிடும்.
உணவு வீணாகாமல் இருக்க, அவற்றை சிறிய அளவில் வாங்கவும். உங்கள் மசாலாப் பொருட்களை வாங்கிய தேதியுடன் லேபிளிடுவது அவற்றின் அடுக்கு வாழ்க்கையைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
காபி
நீங்கள் காபி பிரியரா? உங்கள் கிச்சனில் காபி பீன்ஸ் அல்லது காபித்தூளை சேமித்து வைத்திருக்கலாம். நீங்கள் முழு பீன்ஸ் அல்லது புதிதாக அரைத்த காபியை குளிர்ந்த, உலர்ந்த, இருண்ட இடத்தில் மூடிய ஜாடியில் இரண்டு வாரங்கள் வரை சேமிக்கலாம்.
பழைய காபித்தூளை தூக்கி எறிவதற்குப் பதிலாக, ஐஸ்கிரீமில் ஓரிரு ஸ்கூப்களைச் சேர்க்கலாம்.
சமையல் எண்ணெய்
நீங்கள் நினைக்கும் அளவுக்கு சமையல் எண்ணெய்கள் நிலைக்காது. அவை பழையதாகவும் புளிப்பாகவும் மாறி, காலப்போக்கில் அவற்றின் நறுமண குணங்களை இழக்கின்றன. சில சமையல் எண்ணெய்கள் திறந்த பிறகு ஒரு வருடம் வரை நீடிக்கும், எல்லா வகைகளும் அப்படி இருக்காது. உதாரணமாக, , ஒரு பாட்டில் ஆலிவ் எண்ணெய் திறந்தவுடன் சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“