Optical illusion game: “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்,
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற எம்.ஜி.ஆருக்காக கவிஞர் மருதகாசி எழுதிய தத்துவப் பாடல் எந்த அளவுக்கு வாழ்க்கைக்கு பொருந்துமோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படித்தான், எல்லாம் ஒரே மாதியான டவ்கான் பறவைகள் இருக்கிறது. அவைகளுக்கு இடையே மறைந்திருக்கிற பெங்குயின் பறவையை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு புகழ் பெற்ற பிரபல ஹங்கேரி ஓவியரான ஜெர்ஜ்லி டுடால்ஃப் உருவாக்கியுள்ள இந்த படத்தில் நிறைய ‘டவ்கான்’ பறவைகள் இருக்கிறது. டவ்கான் பறவைகளுக்கு இடையே அவற்றைப் போலவே தோற்றம் கொண்ட, பெங்குயின் பறவை மறைந்திருக்கிறது.
டவ்கான் பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கிற பெங்குயின் பறவையைக 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். அப்படி கண்டுபிடித்துவிட்டால், நிஜமாகவே நீங்க ‘கிரேட்’தான்
என்ன பெங்குயினைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.
பெங்குயின் பறவை முகம் வேறு மாதிரியாக இருக்கும். பெங்குயின் படத்தில் வலதுபக்கம் இருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. கவலைப்பட வேண்டாம் உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”