வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் : மத்திய பிரதேசத்தில் சாலையோரத்தில் இரண்டு வயது தம்பியின் இறந்த உடலை மடியில் கிடத்தி கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் நிலையைப் பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் , மொரேனா மாவட்டம் அம்பா கிராமத்தில் வசிப்பவர் பூஜாராம். இவருக்கு குல்ஷன்8 ராஜா2 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உள்ளூர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் 30 கி.மீ. தூரத்தில் உள்ள மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.
பூஜாராம் தன் இரு மகன்களுடன் மொரேனாவுக்கு வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தான். கதறி அழுத பூஜாராம் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகிகள் மறுத்து விட்டனர். தனியார் ஆம்புலன்ஸ்களும் 1500 ரூபாய் கேட்டதால் பூஜாராமல் அதை கொடுக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் குல்ஷன் மடியில் ராஜா உடலை கிடத்தி வைத்து விட்டு வாகனம் ஏதாவது கிடைக்குமா என தேடிப் போனார்.
தம்பியின் உடலை சுற்றும் ஈக்களை விரட்டிக் கொண்டு கண்ணீருடன் குல்ஷன் அமர்ந்திருந்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் படமெடுத்து பதிவிட்டார். அதைப் பார்த்த போலீஸ் அதிகாரி யோகேந்திர சிங் விரைந்து வந்தார். மாவட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து பூஜாராமுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.தம்பி உடலுடன் கண்ணீருடன் குல்ஷன் அமர்ந்திருந்த படத்தை பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement