இலங்கையில் இருந்து கோத்தபய தப்பியோட்டம்.!
கோத்தபய தப்பியதை சபாநாயகர் உறுதிப்படுத்தியதாக தகவல்
இலங்கை அதிபர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்
திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
கோத்தபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன
அரை மணிக்கு முன்னர் கோத்தபய ராஜபக்சே மற்றும் குடும்பத்துடனான ஹெலிகாப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தன
இரத்மலானையிலிருந்து எங்கு செல்வார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்