வாடிகன் சிட்டி,
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், ஆள்வோருக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் தீவு நாடான அங்கு பெரும் அரசியல் மற்றும் சமூக குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.