இலங்கை பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்த நிலையில் மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து, ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஜனாதிபதி மாளிகையில் மக்கள் படுக்கை அறையில் படுப்பது முதல் ஸ்விமிங் பூலில்ல குதித்து விளையாடுவது வரையில் பல சேட்டைகளைச் செய்து வருகின்றனர்.
அனைத்தையும் தாண்டி ஜனாதிபதி-யின் சமுகவலைதளக் கணக்கில் ஒருவர், வீட்டில் சின்னப் பின் சார்ஜர் இல்லையா எனக் கேள்வி கேட்டது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. ஜோக்குகளைத் தாண்டி சீரியஸ் ஆக வேண்டிய நேரம் இலங்கைக்கு வந்துள்ளது.
விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?!
கவர்னர், பிரதமர்
ஒருபக்கம் மின்சாரம், பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் என எதுவும் இல்லாமல் இருக்கும் வேளையில் கவர்னரும் தப்பி ஓடிவிட்டார், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கடந்த சில வாரங்களாகக் கச்சா எண்ணெய்க்கு ரஷ்யாவிடமும், கடனுக்காக ஐஎம்எப்-யிடிம் பேச்சுவார்த்தை அனைத்தும் வீணாகியுள்ளது.
யூரியா
இந்த நிலையில் தான் இந்தியா பல டன் யூரியாவை இலங்கைக்கு அனுப்பியுள்ளது, இலங்கையில் ஏற்கனவே பல துறை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள வேளையில் விவசாயம் மட்டும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இலங்கை-யை காப்பாற்ற எவ்வளவு பணம் தேவை தெரியுமா..?
6 பில்லியன் டாலர்
2023ஆம் ஆண்டு முடியும் வரையில் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான உணவு பொருட்கள் குறிப்பாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவு பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றை வாங்க சுமார் 6 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. 6 பில்லியன் டாலர் இருந்தால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தை விளிம்பு நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்.
இந்தியா உதவி
சரி பணம் எங்கு இருந்து வரும், கடந்த சில மாதத்தில் இந்தியா இலங்கைக்குச் சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகவும், பொருளாகவும் அளித்துள்ளது. இதேவேளையில் இந்தியா உதவி செய்யச் சமீபத்திய கூட்டத்தில் உறுதி செய்தாலும் எவ்வளவு, எப்படி என்பது தெரியவில்லை.
ஐபிஎம், உலக வங்கி
இதேவேளையில் இலங்கை அரசு சில கத்தார் அமைப்புகளிடமும் உதவியை நாடியுள்ளார். ஆனால் இந்தக் கடன் இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் யாரையும் நம்பாமல் இயக்க உதவுமா என்றால் நிச்சயமாக இல்லை, இதனால் பெரும் தொகை ஐபிஎம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து இலங்கைக்குத் தற்போது தேவை.
அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேருக்கு ஐடி வேலை..!
How Much SriLanka Needs to stabilize its crumbling economy
How Much SriLanka Needs to stabilize its crumbling economy இலங்கை-யை காப்பாற்ற எவ்வளவு பணம் தேவை தெரியுமா..?