அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக போலி ரசீதுகளை தாக்கல் செய்து வரி விலக்குபெறுவதற்கு ரிட்டர்ன் தாக்கல் செய்த 4 ஆயிரம் பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நன்கொடை வழங்கியதாக தாக்கல் செய்யப்பட்ட கட்சிகள் தற்போது தீவிர அரசியலில் இல்லை என்பதால் விளக்கம் கேட்டு வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்விதம் அங்கீகாரம்இல்லாத கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக பதிவு செய்து வைத்திருக்கும்.
தங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடையில் 10 சதவீதம் முதல் 20 சதவீதத்தை மட்டுமே இக்கட்சிகள் எடுத்துக்கொள்ளும். எஞ்சிய 80 சதவீதத்தை நன் கொடை அளித்தவர்களுக்கே திருப்பி தந்துவிடும். இதனால் இக்கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி அதற்கான போலி ரசீதுகளை தாக்கல் செய்துவிலக்கு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதில் மாத சம்பளதாரர்களும் இவ்விதம் கட்சிகளுக்கு நன் கொடை வழங்கியதாக ரசீது பெற்று தாக்கல் செய்துள்ளனர். இப்போது இவர்களுக்கும் நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத னால் இவர்களும் விசாரணை வரம்பில் சிக்கியுள்ளனர்.
இந்த வகையில் ரூ.2,000 கோடி வரை பணம் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது. விசாரணையின்போது ரூ.30 கோடி ரொக்கத்தை 2020-21-ம்நிதி ஆண்டில் கைப்பற்றினர். இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி அதன் விவர அறிக்கை மத்திய நேரடி வரி வருவாய் ஆணையத்திற்கு (சிபிடிடி) அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கட்சிக்கு தனி நபரோ அல்லது நிறுவனமோ நன்கொடை அளிக்கும். இதற்கு வருமான வரி சட்டம் 80ஜிஜிபி-யின்படி நன்கொடை அளித்தவர் விலக்கு பெற முடியும். நன்கொடை அளித்த தொகையில் 80 சதவீதம் முதல் 90 சதவீதமும் கிடைத்துவிடும்.
இத்தகைய நடைமுறை ஒரு மாநிலத்தில் மட்டுமே அல்லது ஒரு கட்சி மட்டுமே செயல்படுத்துவது அல்ல. இதுபோன்ற தில்லுமுல்லு நாடு முழுவதும் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அங்கீகாரம் பெற்ற கட்சிகளில் சில இதுபோன்ற கேஷ்பேக் ஆபர்களை மட்டும் அளித்து வருகின்றன. இதுபோன்ற கட்சிகளுக்கு நன்கொடை அளித்து வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஜிசிசிஐ நேரடி வரி குழுவின் தலைவர் சிஏ ஜெய்னிக் வகீல் தெரிவித்துள்ளார். -பிடிஐ