இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு , இப்போது முதல் முறையாக திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், இப்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். கொதித்தெழுந்துள்ள பொதுமக்கள், அதிபர் மாளிகையை சூரையாடியதில், அவர் நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாடு எப்போது திவாலானதாக அறிவிக்கப்படுகிறது
பிற நாடுகளிடமிருந்தோ அல்லது சர்வதேச நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிய கடனை அரசால் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத போது ஒரு நாடு திவாலானதாக அறிவிக்கப்படுகிறது. 708 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 2022 மே வரை காலக்கெடு அளிக்கப்பட்டது. பல முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட பிறகும் இலங்கையினா பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் இறுதியில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
சீனாவின் வலையில் சிக்கிய இலங்கை
இலங்கையின் இன்றைய நிலை, திடீரென ஏற்பட்டதல்ல. இதன் விதை 10 ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கபட்டு விட்டது. சீனாவுடனான நெருக்கம் மற்றும் கணக்கில் வராத கடன் ஆகியவை இலங்கையின் நிலைமையை மோசமாக்கியது. இன்று நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்போ, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களோ இல்லை. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தத் தொகை 2020 ஆன் ஆண்டில் ஐந்து மாத இறக்குமதிக்கு போதுமானதாக இருந்தது. தவறான கொள்கைகள் மற்றும் அதிக அளவிலான கடன்கள் காரணமாக வெளிநாட்டு கடன்கள் மற்றும் பிற அந்நிய செலாவணி செலுத்துவதற்கு இலங்கையிடம் போதுமான கை இருப்பு இல்லாத நிலை உண்டானது.
இலங்கையின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் அழுத்தத்தில் இருந்தது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2020ம் ஆண்டின் இறுதியில் 5.7 பில்லியன் டாலர்களை எட்டியது மற்றும் 2021 நவம்பரில் 1.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. இலங்கையின் இன்றைய நிலைக்கான விதை 10 ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளில், தவறான கொள்கைகள் மற்றும் கடுமையான கடன் அழுத்தங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
திவாலான அர்ஜென்டினா
ஒரு நாடு திவாலாவது வரலாற்றில் முதன்முறையாக நடப்பது அல்ல. இதற்கு முன்பே பல நாடுகள் திவாலாகியுள்ளன. 2001-ம் ஆண்டு அர்ஜென்டினாவிலும் இதே நிலை உருவானது. அப்போது அர்ஜென்டினா அரசு, கடனை அடைக்க தங்களிடம் பணம் இல்லை என்று என கை விரித்தது. அர்ஜென்டினாவில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உச்சத்தை எட்டியதால் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
1991ல், இந்தியாவின் நிலையும் கிட்டத்தட்ட திவால் நிலையை எட்டியது. இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அமல்படுத்திய பிறகு, நாட்டின் பொருளாதாரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இருப்பினும், இந்தியாவில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்படுவதற்குப் பரவலான எதிர்ப்பு இருந்தது.
திவால் நிலையில் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இதற்கு முன் பலமுறை திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் அது சீனா அல்லது சவுதி அரேபியா கை கொடுத்து காப்பாற்றி விடும். தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் மீண்டும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையால், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தானில் சமையல் எரிவாயு, மின்சாரம், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. பணத்தை மிச்சப்படுத்த கராச்சியில் உள்ள வணிக வளாகங்கள் காலை 10 மணிக்கு மூடப்படுகின்றன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது பதவிக்காலத்தின் கடைசி நாட்களில் ரஷ்யாவை விட அதிக அளவில் கடன் வாங்க முயன்றார். இப்போது பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கை சீனா தான். திவாலாவதைத் தவிர்க்க சீனா உதவிடும் என பாகிஸ்தான் நம்புகிறது.
மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR