ட்ரெயின், ஃப்ளைட், பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைகளின் போது நிகழக்கூடிய சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்த பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதள பதிவுகள் மூலம் காணக் கிடைக்கிறது.
அந்த வகையில், பயணி ஒருவர் இண்டிகோ விமானத்தில் பயணித்ததற்காக விதிக்கப்பட்ட கட்டண விவரங்கள் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதில், தனக்கு விதிக்கப்பட்ட ஃப்ளைட் கட்டணத்தில் க்யூட் சார்ஜ் எனக் குறிப்பிட்டு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டதை கோடிட்டு காட்டி, “வயதாக வயதாக நான் க்யூட் ஆகிறேன் என எனக்குத் தெரியும்தான். ஆனால் ஏன் அதற்கு இண்டிகோ நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது” எனக் கிண்டலடித்து ஷாந்தனு என்பவர் ட்வீட்டியுள்ளார்.
I know I’m getting cuter with age but never thought @IndiGo6E would start charging me for it. pic.twitter.com/L7p9I3VfKX
— Shantanu (@shantanub) July 10, 2022
இந்த ட்விட்டர் பதிவுக்கு பலரிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஏனெனில் அந்த CUTE சார்ஜ், Common User Terminal Equipment என்பதை குறிக்கிறது.
அதாவது, விமான நிலையத்தில் மெட்டல் டிட்டெக்டிங் செய்வதற்காகவும், எஸ்கலேட்டட்ஸ் போன்ற கருவிகளை பயன்படுத்துவதற்காகவும் விமான நிலைய ஆணையத்தால் வசூலிக்கப்படுவதாகும்.
ஷாந்தனுவின் நக்கல் பதிவை கண்ட சிலர் அது எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதை அவருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது பற்றி அவருக்கு ஏற்கெனவே தெரிந்ததாக இருந்தாலும், இண்டெர்நெட் கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்ததாகவும் அவரது மற்றொரு ட்வீட் மூலம் அறியலாம்.
அதில், ஓவர் நைட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. க்யூட் கட்டணம்னா என்னனு எனக்கு அறிவுறுத்திய அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM