புதுடெல்லி: மோசடி நபருக்கு சிறையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக, மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம் பெற்ற டெல்லியில் உள்ள ரோகினி மாவட்ட சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 81 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோடி செய்துள்ளார். ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் புரோமோட்டர் சிவேந்தர் சிங் மனைவியிடம் இவர் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது அதை பெற்றுத் தருவதாக இவர் பேரம் பேசினார். இதுபோல் அவர் பலரிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்துள்ளார்.
டெல்லியில் உள்ள ரோகினி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ் சந்திரசேகர், அனைத்து வசதிகளையும் பெறுவதற்காக அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்.
இதனால் அவருக்கு தனி அறை, செல்போன் பயன்படுத்தி கொள்ள அனுமதி என பல சலுகைகள் அளிக்கப் பட்டுள்ளன. சிறையில் இருந்தாலும் சகல வசதிகளுடன் இருந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸின் பொரு ளாதார குற்றப் பிரிவினர் விசா ரணையை தொடங்கினார். சிறை வளாகத்தில் உள்ள 10 சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, சுகேஷ் சந்திரசேகருக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க சிறை ஊழியர்கள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிறை அதிகாரி கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த டெல்லி சிறை நிர்வாகத்தின் அனுமதிக்காக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 6 மாதங்களாக காத் திருக்கின்றனர். இந்நிலையில் ரோகினி சிறையில் பணியாற்றும் 81 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.