ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில், சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற தேர்தலில் அனுதாப அலையை வீசியது.
மொத்தமுள்ள 248 இடங்களில் ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பல்வேறு சட்ட திருத்தங்களை பிரதமர் கிஷிடோ தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.