ஜிஎஸ்டி அதிகரித்தால் தமிழக அரசுக்கு 2000 கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சிட் பண்ட் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு சில துறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகரித்து வருவது அந்த துறையில் உள்ளவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?
அந்த வகையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சீட்டு பிடிக்கும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிட்பண்ட் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டால் தமிழக அரசுக்கு 2000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சிட் பண்ட் நிறுவனங்கள் எச்சரிக்கை விதித்துள்ளன.
சிட்பண்ட் நிறுவனங்கள்
சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டு பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டி உயர்வு செய்துள்ள நிலையில் இதனை ரத்து செய்ய வேண்டும் என சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி
வாடிக்கையாளர்களிடமிருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு இதுவரை 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனை அடுத்து சிட்பண்ட் நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
2600 சிட்பண்ட் நிறுவனங்கள்
இதுகுறித்து திருச்சி மாவட்ட பைனான்சியர் மற்றும் சிட்பண்ட் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, ‘தமிழகத்தில் 2600 சிட்பண்ட் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றும் அந்த நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
18% ஜிஎஸ்டி
வாடிக்கையாளர்களிடம் சீட்டு பிடித்து வரும் நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீதம் கமிஷன் தொகையில் 12% இதுவரை ஜிஎஸ்டி வரி செலுத்தி வந்தோம் என்றும் தற்போது அது 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது என்றும் தெரிவித்தார். ஜூலை 18ஆம் தேதி முதல் இந்த ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வர உள்ள நிலையில் இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதிருப்தி
28 லட்சம் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்களுக்கு வரி செலுத்த தேவையில்லை என்றும் 80 லட்சம் ரூபாய் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்கள் பாதி வரி செலுத்தினால் போதும் என்றும் அதற்கு மேல் தான் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்று அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது திடீரென 18% ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
சீட்டு பிடிக்கும் வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாத நிலையில் எங்களைப் போன்ற சிறிய சிட்பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
3 கோடி மட்டுமே முதலீடு
வங்கிகள் போல் செயல்பட வேண்டுமானால் 100 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என்றும், அந்த அளவுக்கு எங்களால் முதலீடு செய்ய முடியாது என்றும், பெரும்பாலான நிறுவனங்கள் 3 கோடி மட்டுமே முதலீடு செய்து சீட்டு பிடித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.2000 கோடி
சிட்பண்ட் நிறுவனங்களால் மூலம் தமிழக அரசுக்கு 2,000 கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்றும் ஜிஎஸ்டி வரி உயர்வால் அந்த வருமான இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ரத்து
எனவே வரும் 18 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி வரி விகித உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட பைனான்சியர் மற்றும் சிட்பண்ட் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
GST on chit fund services to 18 percent, Chit Funds Association condemn
Chit funds condemn hike in GST, seek exemption | ஜிஎஸ்டியை அதிகரித்தால் தமிழக அரசுக்கு ரூ.2000 கோடி நஷ்டம் ஏற்படும்… எச்சரிக்கை விடுத்த நிறுவனங்கள்!