புதுடெல்லி: பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 7.69 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், 14 மாணவர்கள் 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். தெலங்கானாவை சேர்ந்த 4 பேர், ஆந்திராவை சேர்ந்த 3 பேரும் நுழைவு தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல் அரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், அசாம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் 100 மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.