புதுடெல்லி: டெல்லியில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே 10,350 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 60 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே டெல்லி தீயணைப்பு துறையின் கட்டுப்பாட்டு சேவை மையம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையில், கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கு விபத்து குறித்து 16,763 அவசர அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 379 அழைப்புகள் தீ விபத்து தொடர்பானவை. இது தொடர்பாக இந்த மையத்தின் இயக்குனர் அதுல் கர்க் கூறுகையில், ‘‘ஜனவரி முதல் கடந்த 30ம் தேதி வரை 340 தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மே மாதம் முண்ட்காவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலியாயினர். இதேபோல், வேறு பல இடங்களில் நடந்த தீ விபத்துகளில் 33 பேர் பலியாயினர்,’ என்றார்.