கோயம்புத்தூர் தீப்பு சுல்தானிடம் இருந்து ஆங்கிலேயர்களிடம் கை மாறிய ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு தோல்வி அடைந்த காபி வியாபாரி ராபர்ட் ஸ்டேன்ஸ் அம்மாவட்டத்தில் தொழிற்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு தனது வர்த்தகப் பயணத்தைத் துவக்கி வைத்துள்ளார்.
கோயம்புத்தூர் மோட்டார் வொர்க்ஸ் மற்றும் பிற ஃபவுண்டரிகளைத் தவிர, ஜவுளி ஆலைகளை நிறுவ ராபர்ட் ஸ்டேன்ஸ் உதவியாக கூறப்படுகிறது. பம்பாய் ஜவுளி ஏற்றம் குறையத் தொடங்கிய நேரத்தில், இந்தியாவின் மறுமுனையில் உள்ள கோயம்புத்தூரில் இத்துறையில் சிறந்து விளங்கத் துவங்கியது. மேலும் கோயம்புத்தூர்-க்கு சாலை மற்றும் ரயில் இணைப்பு மேம்படுத்தப்பட்டதால் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
இப்படிக் காலம் காலமாக டெக்ஸ்டைல் நகரமாகவும், டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஹப் ஆகவும் கோயம்புத்தூர் விளங்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டின் சொல்லப்போனால் தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டெக் ஹப் ஆக மாறிய வருகிறது.
விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?!
கோயம்புத்தூர்
கல்லூரிகளும், பட்டதாரிகளும் நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டம் தற்போது ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களின் முக்கிய டார்கெட் ஆக விளங்குகிறது. ஒரு நிறுவனம் குறிப்பாகப் பெரிய நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைப் புதிய இடத்திற்கு விரிவாக்கம் செய்கிறது என்றால் முதலும் முக்கிய அடிப்படைத் தேவை போதுமான மற்றும் திறன் வாய்ந்த ஊழியர்கள் இப்பகுதியில் இருக்கிறார்களா என்பது தான்.
டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள்
அந்த வகையில் டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களுக்குத் தேவையான திறன் கொண்ட ஊழியர்கள் கோயம்புத்தூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காரணத்தால் பெரு தென்னிந்தியாவில் தனது வர்த்தகம் அலுவலகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டும் போது அனைத்து தரப்பினருக்கும் கோயம்புத்தூர் முதல் ஆப்ஷன் ஆக விளங்குகிறது.
ஐடி நிறுவனங்கள்
தமிழ்நாட்டின் 2வது பெரிய வர்த்தக மாவட்டமாக இருக்கும் கோயம்புத்தூர்-ல் ஏற்கனவே டிசிஎஸ், Bosch, சிடிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில், தற்போது இன்போசிஸ், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2ஆம் தர நகரங்களுக்கான விரிவாக்க பணிகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது. இதற்கிடையில் டெக் மஹிந்திரா, அமேசான் போன்ற நிறுவனங்கள் புதிய அலுவலகங்களைத் திறந்துள்ளது.
கொரோனா
கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு, பெரும்பாலான ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வரும் நிலையில், பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு நிரந்தரமாகக் குடியேறிய நிலையில், அலுவலகத்திற்கு வர தயங்குகிறார்கள்.
Work from Home
பெரு நகரங்களில் வாடகைச் செலவுகள் மற்றும் அதிகரித்துள்ள விலைவாசி போன்றவை ஊழியர்களைப் பெரு நகரங்களுக்குச் செல்ல முட்டுக்கட்டை போடுகிறது. அதையும் மீறி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தினால் பணியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும் நிறுவனங்களில் சேர துவங்கியுள்ளனர்.
இலங்கை-யை காப்பாற்ற எவ்வளவு பணம் தேவை தெரியுமா..?
Coimbatore face is changing from a textile hub to tech hub
Coimbatore face is changing from a textile hub to tech hub தலைகீழாக மாறும் கோயம்புத்தூர்.. இனி இதுதான் நிரந்தரம்..!