டெல்லி: பூமி தாய்க்கு சேவை செய்ய இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று விவசாயிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். குஜராத்தின் சூரத் நகரில் நடந்த இயற்கை விவசாயம் பற்றிய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது.
இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது தாய் மண்ணுக்கும், இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவை செய்வது போன்றது. இதன் மூலம் மண்ணின் தரத்தையும், உற்பத்தி திறனையும் பாதுகாக்க முடியும். கிராமத்தில் மாற்றத்தை கொண்டு வருவது எளிதானதல்ல என்று கூறியவர்களுக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றி பதில் அளித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாய முறை வெற்றியடையும். இந்த இயக்கத்தில் விவசாயி கள் எவ்வளவு சீக்கிரம் இணை கிறார்களோ, அந்த அளவுக்கு பயன்களை அறுவடை செய்வர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
காளி ஆசீர்வாதம்: சுவாமி ஆத்மாஸ்தானந்தாவின் நூற்றாண்டு விழாவுக்கு ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசியதாவது. நம் நாட்டுக்கு அன்னை காளியின் ஆசிர்வாதங்கள் எப்போதும் உள்ளது. அதனால்தான் நம் நாடு உலக நலனுக்காக ஆன்மிக சக்தியுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்னை காளியின் தொலைநோக்கை பெற்ற துறவிகளில் ஒருவர் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர். காளி காலடியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ராமகிருஷ்ண பரம ஹம்சர், எல்லாமே காளியின் செயல் என நம்பினார். இந்த உணர்வை வங்காளத்தின் காளி பூஜாவில் காண முடியும்.
எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேலூர் மடம் மற்றும் காளி கோயிலுக்கு செல் வேன். உங்களின் நம்பிக்கை தூய்மையாக இருக்கும்போது, அன்னையின் அருள் உங்களுக்கு வழிகாட்டும். மனிதநேயத்துக்கு ராமகிருஷ்ண மிஷன் செய்யும் சேவை மகத்தானது. ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் தேசிய ஒற்றுமைக்கான தூதுவர்கள். வெளிநாடுகளில் இந்திய கலாச் சாரத்தின் பிரதிநிதிகளாக விளங்கு கின்றனர்.
நமது சிந்தனைகள் பரந்ததாக இருக்கும்போது, நமது முயற்சி களில் நாம் தனிமையில் இருப்பதில்லை. இந்திய துறவி கள் பலர் எந்த ஆதாரமும் இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றி ஒரு உதாரணம். தூய்மை இந்தியா திட்டம் வெற்றியடையும் என பலர் நம்பவில்லை. ஆனால் வெற்றி அடைந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். -பிடிஐ