நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ள அதேநேரம் கட்சிகள் பலவும் இரகசிய கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பலத்த பாதுகாப்புடன் எங்கேயோ ஓரிடத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டி தினக்குரல் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இருக்கம் இடம் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படாதுள்ளன.
மார்ச் இறுதி வரையில் மீரிஹானவில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி அங்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களாக கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையிலேயே தங்கி வந்தார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,