அதிமுக செயற்குழு பொதுக் குழு கூட்டம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் மண்டபத்தின் நுழைவாயிலில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல், கியூ.ஆர். கோட் சோதனை செய்யும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க உறுப்பினர்களுக்கு நவீன நுட்பத்தில் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதனை ஸ்கேன் செய்ய தனி எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மண்டப வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காலை 9 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
காலை 9.15 மணிக்கு பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பின் முடிவை பொறுத்து கூட்டம் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.