டெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையின் உச்சியில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட, 9,500 கிலோ எடையுள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ள ஷ்ரம்ஜீவிகளுடன் பிரதமர் உரையாடினார்.