வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நினைவு சின்னம் 9,500 கிகி எடையும், 6.5 மீட்டர் உயரமும் கொண்டது. சின்னத்தை தாங்கும் வகையில், 6,500 கிலோ எடை கொண்ட இரும்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. களிமண்ணால் மாதிரி உருவாக்கம், கணினியில் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கம் என 8 படி நிலைகளுக்கு பிறகு வெண்கலத்தால் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைக்கு பிறகு இந்த நினைவு சின்னத்தை திறந்து வைத்த மோடி, பணியாளர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பார்லிமென்ட் கட்டடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின் கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டடம் 64.500 சதுர மீட்டர் பரப்பில் ரூ.971 கோடி செலவில், 4 தளங்களை கொண்டதாக நவீன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement