பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் கடினமான உழைப்பு! நிழல்கள் ரவி வெளியிட்ட தகவல்!!
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரமிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் தற்போது வீடு திரும்பியிருக்கிறார். அதோடு இன்று நடைபெறும் கோப்ரா படத்தின் ஆடியோ விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, அந்த படத்திற்காக விக்ரம் மிகக் கடுமையாக உழைத்ததாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும் போது, பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் குதிரையில் அமர்ந்தவாறு நடிக்கும் காட்சிகளை பல நாட்களாக படமாக்கி வந்தார் மணிரத்னம். அந்த காட்சிகள் தொடங்கப்பட்டபோது ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு குதிரையில் ஏறி அமர்ந்தபடி நடிக்க தொடங்கும் விக்ரம், மாலை 5 மணி வரை குதிரை மீது அமர்ந்தபடி நடித்துக் கொண்டே இருப்பார். கொஞ்சம் கூட முகத்தில் சோர்வோ சலிப்போ தட்டாமல் அந்த கேரக்டரின் தன்மையை அழுத்தமாக பதிவு செய்தார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த போது விக்ரமின் டெடிக்கேசனை பார்த்து வியந்து போனேன் என்று தெரிவித்திருக்கிறார் நிழல்கள் ரவி.