கொழும்பு: மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச என்று நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார். நாட்டைவிட்டு வெளியேறி கோட்டாபய ராஜபக்ச அருகில் உள்ள ஒரு நாட்டில் பாதுகாப்பாக உள்ளார். மேலும் வரும் புதன்கிழமை பதவியை ராஜினாமா செய்ய கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவார் என்றும் சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.