பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியின், 141 ஆரம்ப சுகாதார மையங்களின் தொலைக்காட்சிகளில், தேசிய சுகாதார திட்டம் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய விளம்பரம் வெளியிடப்படுகிறது. இதில் மேயராக கங்காம்பிகா, மாநகராட்சி கமிஷனராக மஞ்சுநாத் பிரசாத் என பிரசுரிக்கப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சியின், 141 ஆரம்ப சுகாதார மையங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில் குடும்ப நலத்திட்டங்கள், குடும்ப கட்டுப்பாடு, விஷப்பூச்சி கடி, எய்ட்ஸ், மலேரியா, டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் குறித்து, விடியோ வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக புதிய விடியோக்கள் தயாரிக்கவில்லை. நான்காண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மேயர் பதவி முடிந்து, நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் மாநகராட்சி உள்ளது.
மற்றொரு பக்கம் மாநகராட்சி கமிஷனரும் மாறியுள்ளார்.ஆனால் சுகாதார மையங்களின் தொலைக்காட்சி வீடியோக்களில், இப்போதும் மாநகராட்சி மேயராக கங்காம்பிகா, கமிஷனராக மஞ்சுநாத் பிரசாத் என, பிரசுரித்து மக்களுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக, தேசிய சுகாதார திட்டங்களில், எந்த மாற்றமும் இல்லாததால், வீடியோவிலும் மாற்றம் செய்யவில்லை. வரும் நாட்களில், புதிய வீடியோ பதிவேற்ற நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement