இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக சென்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பதற்கு இங்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்து மக்கள் கட்சியினர், காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சற்று பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து, இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 43 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்று வலியுறுத்தினார்.