ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி: அடுத்து நிகழ்ந்த சோகம்


தமிழக மாவட்டம் தர்மபுரியில் ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா. இவரும் குளிக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சினேகாவுக்கு கடந்த வாரம் வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானதால் காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது.

அதன் பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 7ஆம் திகதி கோவில் ஒன்றில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த தமிழரசு-சினேகா ஜோடி, தற்கொலை செய்துகொள்ள போகிறோம் என செல்போனில் குறுந்தகவலை பேசி அனுப்பியுள்ளனர்.

பின்னர் இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதற்கிடையில் குறுந்தகவலை பார்த்த இருவரின் உறவினர்களும், காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி: அடுத்து நிகழ்ந்த சோகம் | Love Couple Suicide After Married Dharmapuri

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து, இருவரது வீட்டாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்துகொண்ட காதலர்கள் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.