எச்.ஏ.எல். : திருடன் என தவறாக நினைத்து, வங்கி அதிகாரியை இரும்புத்தடியால் அடித்து கொலை செய்த, செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார்.
ஒடிசாவைச் சேர்ந்த அபினாஷ், 24, அங்குள்ள வங்கி கிளையொன்றில், மேலாளராக பணியாற்றினார். பயிற்சிக்காக பெங்களூரு வந்திருந்தார். முனேனகொப்பலுவில், தன் அண்ணனின் நண்பர்கள் இருந்த அறையில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இரவு பார்ட்டிக்கு சென்ற இவர், ஜூன் 5 அதிகாலை 3:00 மணியளவில், குடிபோதையில் அறைக்கு புறப்பட்டார். ஆனால், அவருக்கு வழி தெரியவில்லை. வழி தவறி எச்.ஏ.எல்.,லின், ஆனந்த நகர் முதல் கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பே, தான் தங்கியிருக்கும் இடம் என நினைத்து, கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தார்.அப்போது அங்கிருந்த செக்யூரிட்டி ஷியாம் நாத், 42, ‘நீ யார், எதற்காக கேட்டில் ஏறி வந்தாய்’ என கேள்வி கேட்டார். ஆனால், அபினாஷ் பதிலளிக்கவில்லை.
இதனால் திருடனாக இருக்கலாம் என, தவறாக நினைத்து இரும்புத்தடியால் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். பீதியடைந்த செக்யூரிட்டி தப்பியோடினார்.எச்.ஏ.எல்., போலீசார் விசாரணை நடத்திய போது, கொலையான இளைஞர், திருடனல்ல. வங்கி அதிகாரி என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த செக்யூரிட்டியை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement