நேபாள வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுமதி செய்கிறது.
முதல்கட்டமாக நேபாளத்தில் இருந்து 3000 மூட்டை சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?
மேலும் வருங்காலத்தில் இந்தியாவுக்கு அதிக அளவு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுமதி செய்வோம் என நேபாள சிமெண்ட் தொழிற்சாலைகள் தெரிவித்துள்ளது.
நேபாளம்
நேபாள வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு 3000 சிமெண்ட் மூட்டைகளை அந்நாட்டிலுள்ள ‘பல்பா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற சிமெண்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. சிமெண்ட் ஏற்றுமதிக்கு நேபாள அரசு 8 சதவீதம் மானியம் வழங்கியதை அடுத்து நேபாளத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு ஏற்றுமதி
நேபாளத்தில் உள்ள மூலப் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் இந்த சிமெண்ட் தரமானது என்றும், நேபாள அரசு கொடுத்த மானியம் காரணமாக இந்தியாவுக்கு நாங்கள் 3 ஆயிரம் மூட்டை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளோம் என்றும் இனி இந்தியாவின் தேவைக்கேற்ப ஏற்றுமதியை அதிகரிக்கவும் எங்களால் முடியும் என்றும் ‘பல்பா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ மக்கள் தொடர்பு அலுவலர் ஜீவன் நிருலா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மானியம்
நேபாளத்தில் உள்ள மூலப் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் இந்த சிமெண்ட் தரமானது என்றும், நேபாள அரசு கொடுத்த மானியம் காரணமாக இந்தியாவுக்கு நாங்கள் 3 ஆயிரம் மூட்டை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளோம் என்றும் இனி இந்தியாவின் தேவைக்கேற்ப ஏற்றுமதியை அதிகரிக்கவும் எங்களால் முடியும் என்றும் ‘பல்பா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ்’ மக்கள் தொடர்பு அலுவலர் ஜீவன் நிருலா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிமெண்ட் உற்பத்தி
நேபாளத்தில் 50க்கும் மேற்பட்ட சிமெண்ட் நிறுவனங்கள் செயல்பட்டாலும் ‘பல்பா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ தொழிற்சாலை உள்பட 15 சிமெண்ட் நிறுவனங்கள் அதிக உற்பத்தியை செய்து வருகின்றன. நேபாளத்தில் உள்ள மொத்த சிமெண்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறன் 22 மில்லியன் டன்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் போட்டி
நேபாள சிமெண்ட் இறக்குமதி காரணமாக இந்தியாவில் உள்ள சிமெண்ட் விலை கடுமையான போட்டியை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாக இந்திய சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
‘பல்பா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ்’ நிர்வாக இயக்குநர் சேகர் அவர்கள் அவர்கள் சிமெண்ட் ஏற்றுமதி குறித்து கூறியபோது சிமெண்ட் ஏற்றுமதியால் இந்தியாவுடனான நேபாள வர்த்தக பற்றாக்குறை 15 சதவீதம் குறையும் என்றும் இந்திய சந்தையில் உள்ள விலையை ஒப்பிடும் போது எங்கள் விலை குறைவாக இருக்கும் என்றும் அதே நேரத்தில் தரமும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சொந்த தாது
நேபாளத்தை பொருத்தவரை சிமெண்ட் தேவை தன்னிறைவு பெற்று இருப்பதால் நாங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், தங்களது சொந்த சுண்ணாம்பு தாதுப்பொருட்களை சிமெண்ட் உற்பத்திக்கு பயன்படுத்துவதாகவும் சேகர் மேலும் தெரிவித்துள்ளார்.
உறவு வலுவாகும்
‘மேக் இன் இந்தியா’ என்ற கொள்கைகளை உடைய மத்திய அரசு இந்தியாவில் தேவைக்கு அதிகமாக சிமெண்ட் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் இறக்குமதி எதற்காக? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வர்த்தகம் இந்திய நேபாள உறவை வலுவாக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Nepal exports cement to India for first time in histroy
Nepal exports cement to India for first time in histroy | வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நேபாளம்.. என்ன தெரியுமா?