இன்றைய இளைஞர்கள் மத்தியில் சொந்தமான தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் மத்தியிலும் இருக்கும். ஆனால் என்ன செய்வது என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கும்.
இதனாலேயே பலரும் படித்து முடித்தோமா? வெளி நாட்டில் வேலை தேடி சென்றோமா? கை நிறைய சம்பளம் வாங்கினோமா? என்று இருக்கின்றனர்.
வெளி நாட்டில் வேலையில் இருக்கிறார்கள் என்றாலும், அது நம்மூரை போல வருமா? என்பது பெரும் கேள்வியாகவே இருக்கும்.
அதிமுக கட்சிக்கு எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?
வெளி நாட்டு வேலை மோகம்
குடும்பத்தினைரை விட்டு, பல ஆயிரம் மைல்களுக்கு அந்த பக்கம் சென்று தனியாளாய் கஷ்டப்படும் நிலை. அப்படி சம்பாதித்தாலும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க முடியுமா? என்றால் அது மிகப்பெரிய கேள்வி தான். அதிலும் தாங்களாய் சமைத்து, இருக்கும் உணவை உண்டு, அரைகுறை வயிறோடு போராடும் பலரையும் பார்த்திருக்கலாம். ஆனால் நல்லது கெட்டது என எதிலும் கலந்து கொள்ள முடியாமல், வருடத்தில் ஒரு முறை, விருந்தாளிகள் போல் வந்து விட்டு செல்வதெல்லாம் கொடுமை.
ஏராளமான வாய்ப்புகள்
அதனை அனுபவித்த குடும்பங்களில் தான் அந்த கஷ்டம் எந்தளவுக்கு என்பது புரியும். தம்பதியராய் சென்றால் கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும், இருவரும் வேலை செய்வதாயிருந்தால் பரவாயில்லை. அப்படி இல்லை எனில் அது அவர்களின் செலவுகளுக்கே சரியானதாக இருக்கலாம். மொத்தத்தில் வெளிநாடுகளில் சென்று அவஸ்தை படுவதை விட, நம்மூரிலேயே பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதனை தேடிப்பிடிப்பதே சிறந்தது.
UAE-3ல் பணி
அப்படி வெளி நாட்டு மெஷினரி வாழ்க்கையை விடுத்து, இன்று இந்தியாவில கலக்கும் கேரளா தம்பதியினை பற்றியும், அவர்களின் தொழில் குறித்தும் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கேரளாவினை சேர்ந்த தம்பதி தேவகுமார் மற்றும் சரண்யா இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்து வந்தனர். ஆனால் அந்த மெஷினரி வாழ்க்கையை வெறுத்த இருவரும் தாயகம் திரும்பியுள்ளனர்.
பாப்லா
தாயகம் திரும்பிய கையோடு பாப்லா (Papla) என்ற வணிகத்தினையும் தொடங்கியுள்ளனர். இது பாக்குமர மட்டையில் இருந்து பல்வேறு பொருட்களை செய்து விற்பனை செய்தும் வருகின்றனர்.
இது எல்லோரு செய்வது தானே. இது என்ன புதியதாக இருக்கிறது என கேட்கலாம். பாக்கு மட்டை தட்டில் இருந்து பொதுவாக நமது பகுதிகள் தட்டுகள் செய்வார்கள். இது வெவேறு அளவுகளில் இருக்கும். ஆனால் இந்த கேரளா தம்பதிகள், தட்டுகளோடு, பல்வேறு விதமான பொருட்களையும் செய்து வருகின்றனர்.
யாரிந்த தம்பதிகள்?
இந்தியாவில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
பொறியாளரான தேவகுமார் நாரயணன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இவர்கள் சுமார் 9 – 5 கார்ப்பரேட்டுகளில் பணிபுரிந்துள்ளார். வழக்கம்போல இவரின் வாழ்க்கையும் ரேபோ போலவே இருந்துள்ளது. பணிபுரியும்போது சரண்யாவுடன் திருமணமும் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு இன்னும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேம், வேறு வழியின்றி தாயகம் திரும்புகின்றனர்.
குழப்பம்
2018ல் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய தம்பதிகள், சொந்த தொழில் பற்றி சிந்தித்து இருந்தாலும், என்ன செய்வது என்பதில் உறுதியாக இல்லை.
அதன் பிறகு உற்பத்தி துறையில் இறங்குவது என முடிவெடுத்த நிலையில், இயற்கையாக கிடைக்கும் மூலதனத்தினை வைத்து எதுவானாலும் செய்ய வேண்டும் என்ற முடிவினை எடுத்தோம்.
அதென்ன பாப்லா?
இதனை பலவற்றை ஆராய்ந்து அதன்பிறகே பரிசீலித்தோம். பிளாஸ்டிக்குகளுக்கு நல்ல மாற்றாக உள்ள பாக்கு மட்டை என தேர்தெடுத்தோம். இது மக்கும் தன்மை உள்ளது. அதன் பிறகே இதனை வணிகமாக்கும் திட்டத்தினை கையில் எடுத்தோம். அதற்கான பெயரை பற்றி யோசிக்கும்போது பிளாஸ்டிக் மற்றும் காகிதத்திற்கு மாற்றாக யோசித்து பாப்லா என வைத்தோம்.
வீட்டில் அருகிலேயே உற்பத்தி
2018ம் ஆண்டு தொடங்கிய இந்த பாப்லாவில் 2 லட்சம் வரையில் டர்ன் ஓவர் செய்யப்படுகின்றது. இங்கு பாக்கு மர மட்டைகலை வைத்து பொருட்களை செய்து வருகின்றோம். இதற்காக வீட்டில் அருகிலேயே உற்பத்தி ஆலை ஒன்று சிறிய அளவில் அமைத்துள்ளதாகவும், தற்போது இங்கு 7 பேர் பணியாற்றி வருவாதாகவும் தேவகுமார் தெரிவித்துள்ளார்.
மூலதன பொருட்கள் எங்கு?
நாங்கள் எங்களுக்கு தேவையான மூலதன பொருட்களை பெரும்பாலும் காசர்கோடில் இருந்தும், சில சமயங்களில் கர்நாடகாவில் இருந்தும் பெறுகின்றோம். வாங்கும்போதே அவற்றின் தரத்தினை உறுதி செய்த பிறகே அதனை வாங்குகிறோம். அதன் தரத்திற்கு ஏற்ப பணமும் செலுத்திறோம்.
சேகரிக்க வேண்டும்
இந்த தட்டுகள் மரங்களில் இருந்து தானாக விழும்போது எடுத்து சேகரிக்கப்படுகின்றன. இது மரங்கள் பூக்கும் காலத்தில் தான் கிடைகும். இதில் மிகப்பெரிய சவால் என்னவெனில் நமக்கு வருடத்திற்கும் தேவையான மட்டைகளை வாங்கி சேகரித்து வைக்க வேண்டும். அதற்காக ஒரு தனி இடம் வேண்டும். ஆக இருப்பு சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
என்னென்ன பொருட்கள்?
பாப்லாவில் தற்போது பெரும்பாலும் தட்டுகள், கிண்ணங்கள், ஸ்பூன்கள் போன்ற பல பொருட்கள் அடங்கும். இதில் 4 இன்ச் முதல் 10 இன்ச் வரையிலான தட்டுகள், ஆழமற்ற மற்றும் ஆழமான கிண்ணங்கள், ஸ்பூன் என பலவும் உள்ளன. இது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கொடுக்கப்படுகின்றது.
கையால் செய்யப்படக்கூடிய பொருட்கள்
இது மட்டும் அல்ல கையால் செய்யப்பட்ட சோப்புகள், பேட்ஜ்கள், தொப்பிகள், கை விசிறிகள், க்ரோ பேக்குகள் மற்றும் திருமண அழைப்பிதற்க்கான பேக்கேஜிங்கையும் பாப்லா உற்பத்தி செய்து வருகின்றது. இது மக்கும் தன்மை கொண்ட ஒன்றாகும். இதில் 1.50 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலான டேபிள்வேர்கள் சிற்பபாக விற்பனையாகும் பொருட்களாக உள்ளன. இதே கையால் செய்யப்படும் பொருட்கள் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனை இணைதளம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் விற்பனை செய்து வருகின்றது பாப்லா.
திருமண அழைப்பிதழ்
சமீபத்தில் இந்த மட்டைகளில் திருமண அழைப்பிதல்களை அச்சிடும் முறையை இந்த தம்பதியர் முயற்சித்தூள்ளனர். இது காகிதங்களுக்கு மாற்றாக இருக்கும் என்று கூறும் இவர்கள், இதற்கு யுவி பிரிண்டிங் வசதியினை பயன்படுத்தி அச்சிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். பேட்ஜ்களுக்கும் இதே தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதாகவும், இது பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகவும் இருக்கும் என கூறுகின்றனர்.
விரிவாக்கம் செய்ய திட்டம்
பாப்லா, அவர்களின் பொருட்கள் தவிர இதுபோன்ற தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த தெரியாமல் தவிக்கும் கைவினை பொருட்களையும் இதில் பட்டியலிட்டு உதவி வருகின்றனர்.
மேலும் எதிர்காலத்தில் வாழை நார், தேங்காய் நார் என பல மூலப் பொருட்களையும் கொண்டு பல பொருட்களை செய்ய விரும்புகிறோம் என கூறியுள்ளனர்.
Kerala-based couple Devakumar and Saranya’s successful natural products business: How much income?
Kerala-based couple Devakumar and Saranya’s successful natural products business: How much income?/வெளி நாட்டு வேலையே வேண்டாம்.. தூக்கி எறிந்த தம்பதிகள் லட்சங்களில் வருமானம்.. அப்படி என்ன தொழில்?!