மங்களூரு : மங்களூரின், பிளிகுலாவில் உள்ள சிவராம் காரந்த் உயிரியல் பூங்காவில், 31 காளிங்க நாகங்கள், முட்டையை உடைத்து வெளியே வந்துள்ளன.தட்சிண கன்னடா, மங்களூரின், பிளிகுலாவில் உள்ள சிவராம் காரந்த் உயிரியல் பூங்காவில், 8 வயதான ‘நாகினி’ என்ற பெயர் கொண்ட பெண் காளிங்க நாகம், 76 நாட்களுக்கு முன், 38 முட்டைகள் இட்டது.
இவற்றை, பூங்கா அதிகாரிகள், ஆய்வகத்தில் அடை காக்க வைத்திருந்தனர்.முட்டைகள் உடைந்து, குட்டிகள் நேற்று வெளியே வரத்துவங்கின. இதுவரை, 31 குட்டிகள் வெளியே வந்துள்ளன. பிறக்கும் போதே விஷம் நிறைந்துள்ள, காளிங்க நாகப்பாம்பு குட்டிகள், 1.5 அடி நீளம் உள்ளன. தற்போது குட்டிகளின் வாயை திறந்து உணவு புகட்டப்படுகிறது. இவைகள் வளர்ந்த பின், குடியிருப்புகள் இல்லாத காட்டுப் பகுதிகளில் விடப்படும்.பிளிகுலாவில் தற்போது, 14 காளிங்க நாகங்கள் உள்ளன.
இவற்றில் ஒன்பது ஆண், ஐந்து பெண்ணாகும். பொதுவாக இந்த வகை பாம்புகள், வனத்தில் இன விருத்தி செய்வது வழக்கம். ஆனால் மனிதர்களின் பாதுகாப்பில், இன விருத்தி செய்தது, இப்பூங்காவில் முதன் முறையாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement