இந்தியாவில் பல வங்கிகள் மோசமான நிதி நிலையிலும், ஆர்பிஐ விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றப்படாமலும் இருக்கிறது, அதிலும் குறிப்பாகக் கூட்டுறவு வங்கிகள்.
இந்தியாவில் சிறு டவுன் மற்றும் கிராம பகுதியில் இந்தக் கூட்டுறவு வங்கிகளின் ஆதிக்கம் மிகவும் அதிகம், சிறுக சிறுக சேமித்த பணத்தை இப்பகுதி மக்கள் கூட்டுறவு வங்கிகளில் தான் நம்பி முதலீடு செய்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி 4 வங்கிகள் மீது தடையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
இந்திய இணையத்தின் தந்தை பிகே சிங்கால் காலமானார்.. தொழிலதிபர்கள் இரங்கல்!
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 4 கூட்டுறவு வங்கிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுத்த 6 மாதத்திற்கு விதித்துள்ளது. அதில் முக்கியமாக இந்த 6 மாதத்திற்கு 4 வங்கிகளிலும் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்டிரா செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு வங்கிகள்
ரிசர்வ் வங்கி தற்போது டெல்லியைச் சேர்ந்த ராம்கார்ஹியா கூட்டுறவு வங்கி; சாஹெப்ராவ் தேஷ்முக் கூட்டுறவு வங்கி, மும்பை; சாங்லி சககாரி வங்கி, மும்பை; மற்றும் சாரதா மகிளா கூட்டுறவு வங்கி லிமிடெட், தும்கூர், கர்நாடகா ஆகிய 4 வங்கிகள் மீது ஆர்பிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நிதி நிலையை ஆய்வு
இந்தக் கட்டுப்பாடுகள் வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் கீழ் ரிசர்வ் வங்கி வித்துள்ளது, இந்த 4 கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் காரணத்தால், இந்த முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்து, தத்தம் வங்கிகளின் நிதி நிலையை ஆய்வு செய்து தனிக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள், தடைகள்
ஆர்பிஐ-யின் தடையின் காரணமாக ராம்கார்ஹியா கூட்டுறவு வங்கி; சாஹெப்ராவ் தேஷ்முக் கூட்டுறவு வங்கி, சாங்லி சககாரி வங்கி, சாரதா மகிளா கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆகிய நான்கும் புதிய கடன்களை அளிக்கக் கூடாது, புதிய முதலீடுகளைச் செய்யக்கூடாது, புதிய டெப்பாசிட்களைப் பெற கூடாது.
பணம் வித்டிரா செய்யக் கட்டுப்பாடு
இதேபோல் பணத்தை வித்டிரா செய்ய அதாவது தத்தம் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை வித்டிரா செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் படி ஆர்பிஐ-யின் தடையின் காரணமாக ராம்கார்ஹியா கூட்டுறவு வங்கி மற்றும் சாஹெப்ராவ் தேஷ்முக் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு 50,000 ரூபாய், சாங்லி சககாரி வங்கிக்கு 45,000 ரூபாய், சாரதா மகிளா கூட்டுறவு வங்கி லிமிடெட் 7000 என்ற அதிகப்படியான அளவீட்டை விதித்துள்ளது ஆர்பிஐ.
RBI imposes restrictions, withdrawal caps on 4 banks; Check which affects more
RBI imposes restrictions, and withdrawal caps on 4 banks; Check which affects more 4 வங்கிகளில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!