AIADMK General body Meeting Live Updates: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத்தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் 90%க்கும் அதிகமானோரின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறும் இரட்டை தலைமை தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த சலசலப்பால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவுக்கு தடைகேட்டு ஓ.பி.எஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், தீர்ப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக உள்ளது. இதனைப் பொறுத்தே பொதுக்குழு நடைபெறும். இது தொடர்பான லைவ் செய்திகளை கீழே காணலாம்.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் வந்தடைந்தார் இபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் வருகை தந்துள்ளார். மோதலுக்கு இடையே அதிமுக அலுவலகத்திற்குள் செல்கிறார் ஓபிஎஸ். ரத்த கறை படிந்த வாகனத்துடன் அதிமுக அலுவலகம் வந்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் வலுத்து வருகிறது. சாலையில் நிற்கும் கார்களை தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். அதிமுக தலைமை அலுவவலகத்தின் கதவை உடைத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல். கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓபிஎஸ். 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில் தலைமை அலுவலகம் புறப்பட்டார்.
ஒருபக்கம் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நிலையில், ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு உடையில் பவுன்சர்களை களமிறக்கி உள்ளது ஓ.பி.எஸ் தரப்பு. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
”ஐகோர்ட் தீர்ப்புக்கு பிறகு அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து சொல்கிறோம்”- வைத்திலிங்கம்
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை. போலி உறுப்பினர்களை தடுக்க அதிநவீன நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில்16 ஸ்கேனர்களுடன் தீவிர பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மதித்தி நடப்போம் – திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வானகரம் புறப்பட்டார்.