அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஆர் பி உதயகுமார் தீர்மானங்களை வசித்து வருகிறார். நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாற்றாக தற்போது அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. துணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுகவின் சட்டவிதிகளில் எங்கெல்லாம் இடம்பெற்றதோ அது அந்த இடங்களில் எல்லாம் இனி துணை பொதுச்செயலாளர் என்று இடம் பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் துணை பொதுச்செயலாளரை, பொதுச்செயலாளர் தான் தேர்ந்தெடுப்பார் என்ற ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.