சமீபத்தில் இண்டிகோ விமானத்தின் பயணம் செய்த ஒரு பயணி ஒருவர் தனது டிக்கெட் கட்டணத்தின் ஸ்கீரின் ஷாட்டினை பகிந்துள்ளார்.
அந்த பதிவில் அழகான கட்டணம் எனப்படும் (cute charges) சேர்த்து வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விமான கட்டணத்தில் ஏர்பேர் சார்ஜஸ், சீட் பீ, கன்வீனியன்ஸ் பீ, ஏர்போர்ட் செக்யூரிட்டி பீ, யூசர் டெவலப்மெண்ட் பீ என வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது.
அம்மாடியோ.. ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.. அப்படி என்ன ஸ்பெஷல்!
ட்விட்டர் பதிவு
இது குறித்து ட்விட்டர் பயனர் ஷாந்தனு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விமான கட்டணத்தில் வசூலிக்கப்படும் கட்டணத்தினை பதிவிட்டுள்ளார். அதில் ஏர்பேர் சார்ஜஸ், சீட் பீ, கன்வீனியன்ஸ் பீ, ஏர்போர்ட் செக்யூரிட்டி பீ, யூசர் டெவலப்மெண்ட் பீ என பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் கடைசியாக க்யூட் சார்ஜ் எனவும் பதிவிடப்பட்டுள்ளது.
அழகுக்கு கட்டணமா?
இதற்கு ஷாந்தனு கொடுத்த கேப்ஷன் தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம். நான் வயதுக்கு ஏற்ப அழகாகத் தான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் இதற்கு இண்டிகோ கட்டணம் வசூலிக்க தொடங்கும் என நான் நினைக்கவில்லை என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
க்யூட் சார்ஜா?
மேற்கண்ட பல கட்டணங்களும் விமான துறை சார்ந்த கட்டணங்களாக உள்ளது. எனினும் அந்த பதிவில் கடைசியாக Cute charge என கடைசியாக பதிவிடப்பட்டுள்ளது. அதென்ன அழகான கட்டணம். இது இணையத்திலும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட பயனர், நிறுவனம் என்னிடம் என் அழகுக்கும் சேர்த்து கட்டணத்தினை வசூலிக்கின்றது என பதிவிட்டுள்ளார்.
இதுக்கு தான் க்யூட் சார்ஜா?
CUTE (Common User Terminal Equipment) – க்யூட் கட்டணம் என்பது காமன் யூசர் டெர்மினல் எக்யூப்மென்ட் என்பதை குறிக்கிறது. இது விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டிங் மெஷின், எக்ஸ்லேட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்படும் தொகையாகும்.
க்யூட் என கூறினால் போதும்
பலரும் இந்த ட்வீட்டுக்கு பதில் கூற முற்பட்டாலும், பலரும் இதனை நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் எனக்கு கவலையில்லை. என்னை யாரேனும் க்யூட் என கூறினால் நான் 100 ரூபாய் செலுத்த தயாராக இருக்கிறேன். என கூறி சிங்கிள்ஸ்-ன் வலி என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
indigo charges a CUTE charge: what is the cute charge?
indigo charges a CUTE charge: what is the cute charge?/Cute charge.. என் அழக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்த இண்டிகோ.. ட்விட்டர் பயனர் கல கல!