Flipkart Sale: சூப்பர் அம்சங்களுடன் வெளியான பட்ஜெட் Moto G42 போன் விற்பனை தொடக்கம் – சலுகைகள் என்ன?

Motorola Moto G42 First Sale Offers: மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த போனை வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த பட்ஜெட் மோட்டோ போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் சலுகைகளுடன் தொடங்கியது.

Moto G42 குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் (Qualcomm Snapdragon 680), ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பல சிறப்பம்சங்களக் கொண்டுள்ளன.

அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi 10 போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?

மோட்டோ ஜி42 சலுகை விலை (Moto G42 Offer Price in India)

மோட்டோரோலா நிறுவனம் Moto G42 ஸ்மார்ட்போன் ரூ.13,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதியான இன்று பகல் 12 மணி முதல் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது.

போன் வாங்கும் போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்தி போனை வெறும் 12,999 ரூபாய்க்கு பயனர்கள் வாங்க முடியும். போன் அட்லாண்டிக் கிரீன், மெட்டாலிக் ரோஸ் ஆகிய இரு வண்ணங்களில் வருகிறது.

மோட்டோ ஜி42 அம்சங்கள் (Moto G42 Specifications)

6.4 இன்ச் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 12ஸ்னாப்டிராகன் 680 4ஜி புராசஸர்50+8+2 மெகாபிக்சல் பின்பக்க கேமரா16 மெகாபிக்சல் செல்பி கேமரா5000nAh பேட்டரி20W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
Smart Tv Tips: எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு ஸ்டெபிலைசர் தேவையா?

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்கின் மூலம் மோட்டோ ஜி42 போன் இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே இருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸருடன் 64 ஜிபி சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக எஸ்டி கார்ட் ஆதரவுடன் சேமிப்பகத்தை 1 TB வரை நீட்டிக்கலாம்.

செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு பிரத்யேக மேக்ரோ விஷன் கேமரா உள்ளது. போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 2MP டெப்த் கேமரா சென்சார் ஆகியவை கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது.

Nothing Phone (1) கேமரா மாதிரி படங்கள் – போட்டானா இப்டி இருக்கணும்!

இந்த போனுக்கு ஐபி 52 வாட்டர் ரெசிஸ்டண்ட் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், கைரேகை ஸ்கேனர், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

சிறந்த பொழுதுபோக்கிற்காக போனில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) திறன்கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சம் உள்ளது. போனின் பேட்டரியை திறனூட்ட 20 வாட் டர்போ சார்ஜர் ஆதரவுடன் சக்திவாய்ந்த 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.