Hair care tips: முடி உதிர்வா? சிம்பிள் ஹோம்மேட் ஷாம்பூ.. இப்படி பண்ணுங்க!

நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.

அதிலும் குறிப்பாக முடி உதிர்தல் என்பது பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. சரியாக கவனித்த போதிலும்’ சிலருக்கு மெதுவாகவே முடி வளர்கிறது. உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால், பயனுள்ள ஹோம்மேட் ஷாம்பூ இங்கே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஷாம்பூ’ முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளை கவனித்துக்கொள்ளும், மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை கொடுக்கும்.

ஹோம்மேட் ஷாம்பூ எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

¼ கப் – பூவந்தி கொட்டை பொடி

¼ கப் – சீகைக்காய் பொடி

¼ கப் – வெந்தயப் பொடி

செய்முறை:

ஒரு கிண்ணத்தில், அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலக்கவும்.  2-3 டீஸ்பூன் (உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து) எடுத்து, அதில் வெதுவெதுப்பான நீர் அல்லது சூடான க்ரீன் டீ சேர்க்கவும். ஹேர் பேக்’ போல’ 2-3 நிமிடங்கள் தடவி பின் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

லன்கள் என்ன?

வழக்கமான ஷாம்பூ போல அல்லாமல், இது நுரையை உருவாக்காது, ஆனால் இது நிச்சயமாக உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் உணர வைக்கும், இதில் சீகைக்காய் பொடி இருப்பதால், நரைப்பதைத் தாமதப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.

பாராபென் மற்றும் சல்பேட் ஷாம்புகள்’ போலல்லாமல் உச்சந்தலையில் மென்மையாக இருக்கும்.

பூவந்தி கொட்டை பொடி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, குளிர்காலத்தில் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டால் இது மிகவும் நல்லது. இது உடலை குளிர்ச்சியாக்கும்.

கடைசியாக, வெந்தயப் பொடி’ முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது, நீங்கள் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தயிர் சேர்த்து ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.

அடர்த்தியான கருகரு கூந்தலுக்கு, இந்த ஷாம்பூவை கண்டிப்பா டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.