Oneplus Oppo Banned in Germany: சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான Oppo, OnePlus கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆம், இந்த இரு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும், தங்கள் தயாரிப்புகளை ஜெர்மனியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா நிறுவனம் தொடுத்த காப்புரிமை வழக்கைத் தொடர்ந்து, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, காப்புரிமை சர்ச்சையில் நோக்கியாவுக்கு ஆதரவாக Mannheim நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
Nothing Phone (1) கேமரா மாதிரி படங்கள் – போட்டானா இப்டி இருக்கணும்!
ஒப்போ, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக, காப்புரிமையை மீறியதாக நோக்கியா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக, நோக்கியாவும் இந்த நிறுவனங்களுடன் சமரசம் செய்ய முயன்றது. இருப்பினும் சமரப் பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
5G Adani Group: அம்பானிக்கு ஜியோ… அதானிக்கு? டெலிகாம் துறையில் கால்பதிக்கும் குழுமம்!
ஸ்மார்ட்போன்கள் விற்க தடை
இறுதியில் நிறுவனம் நான்கு வெவ்வேறு நாடுகளில் ஒப்போ, ஒன்பிளஸ் மீது புகார்களை பதிவு செய்தது. இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இரு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை ஜெர்மனியில் விற்பனை செய்ய முடியாது.
அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi 10 போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?
ஆனால், இது நிரந்தரத் தடையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஓப்போவுக்கு எதிரான காப்புரிமை சர்ச்சையில் நோக்கியா தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சர்ச்சையில் இதுவே முதல் முடிவு. நோக்கியாவின் ஐரோப்பிய காப்புரிமையான EP170731ஐ மீறும் வகையில், Oppo, OnePlus ஆகிய நிறுவனங்கள் இனி ஜெர்மனியில் தங்களின் தயாரிப்புகளை விற்க முடியாது.
அது என்ன காப்புரிமை?
இது வைஃபை இணைப்புகளை ஸ்கேன் செய்வதிலிருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தின் மீதான காப்புரிமை சர்ச்சையாகும். ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளில் 2021 ஆம் ஆண்டில் ஒப்போ மீது நோக்கியா காப்புரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்தது.
இதில் இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கும். செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஒப்போ காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக நோக்கியா கூறுகிறது.
Flipkart Sale: சூப்பர் அம்சங்களுடன் வெளியான பட்ஜெட் Moto G42 போன் விற்பனை தொடக்கம் – சலுகைகள் என்ன?
கிடைத்த அறிக்கையின்படி, Oppo UI / UX மற்றும் நோக்கியாவின் நிலையான அத்தியாவசிய காப்புரிமைகள் (SEPs) மற்றும் SEP அல்லாத பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த முன்மொழிவுகளில் ஒன்று ஒப்போவால் நிராகரிக்கப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நோக்கியா நிறுவனம், முடிவு எட்டப்படாததால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.