அசோகச் சின்னத்தில் செய்யப்பட்ட மாற்றம்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! முழு பின்னணி இதோ!
புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட தேசிய சின்னமான அசோகச் சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். 6.5 மீட்டர் உயரமுள்ள இந்த சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 9,500 கிலோ எடை கொண்டது. இது கட்டிடத்தின் மைய முகப்பின் உச்சியில் வார்க்கப்பட்டுள்ளது. மேலும் அதை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு தூண் அமைப்பு கட்டப்பட்டுள்ளது.
How New Parliament Building Central Vista national emblem weighing 16,000  kg is unqiue vchr | नए संसद भवन का अशोक स्तंभ क्यों है इतना खास, कुल 16000  किलो के स्ट्रक्चर को खड़ा
இந்நிலையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அசோகச் சின்னம் எதிர்க்கட்சிகளிடையே பல எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. அசோகச் சின்னத்தின் இருந்த சிங்கங்களின் அமைப்பில் மத்திய அரசு சூழ்ச்சியாக சில மாற்றங்களை கொண்டு வந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், “சாரநாத்தில் உள்ள அசோக தூணில் உள்ள சிங்கங்களின் தன்மையை முற்றிலும் மாற்றுவது இந்தியாவின் தேசிய சின்னத்தை அவமதிக்கும் செயலே தவிர வேறில்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
To completely change the character and nature of the lions on Ashoka's pillar at Sarnath is nothing but a brazen insult to India’s National Symbol! pic.twitter.com/JJurRmPN6O
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 12, 2022
திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் ஜவஹர் சிர்கார் ட்விட்டரில் இரண்டு வெவ்வேறு படங்களை பகிர்ந்து “நமது தேசியச் சின்னமான, கம்பீரமான அசோக சிங்கங்களுக்கு அவமானம். ஒரிஜினல் இடதுபுறம், அழகானது, நம்பிக்கையுடன் உள்ளது; வலதுபுறம் மோடியின் பதிப்பு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது – முறுமுறுக்கும், தேவையற்ற ஆக்ரோஷமான கொண்டது மற்றும் அவமானம்! உடனடியாக மாற்றவும்” என்று பதிவிட்டுள்ளார்.
Insult to our national symbol, the majestic Ashokan Lions. Original is on the left, graceful, regally confident. The one on the right is Modi’s version, put above new Parliament building — snarling, unnecessarily aggressive and disproportionate. Shame! Change it immediately! pic.twitter.com/luXnLVByvP
— Jawhar Sircar (@jawharsircar) July 12, 2022
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா எதுவும் குறிப்பிடாமல் இரண்டு தேசிய சின்னங்களையும் ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
pic.twitter.com/CHhKM66bl3
— Mahua Moitra (@MahuaMoitra) July 12, 2022
மூத்த வழக்கறிஞரும் ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் “காந்தி முதல் கோட்சே வரை; கம்பீரமாகவும் அமைதியாகவும் அமர்ந்திருக்கும் சிங்கங்களுடன் கூடிய நமது தேசியச் சின்னம் முதல், சென்ட்ரல் விஸ்டாவில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் உச்சியில் வெளியிடப்பட்ட புதிய தேசியச் சின்னம் வரை; கோரைப் பற்களுடன் கோபமடைந்த சிங்கங்கள்! இது மோடியின் புதிய இந்தியா” என்று பதிவிட்டுள்ளார்.
From Gandhi to Godse; From our national emblem with lions sitting majestically & peacefully; to the new national emblem unveiled for the top of the new Parliament building under construction at Central Vista; Angry lions with bared fangs.
This is Modi's new India! pic.twitter.com/cWAduxPlWR
— Prashant Bhushan (@pbhushan1) July 12, 2022
Leave a Comment
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.