இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் உணர்வுபூர்வமானது மட்டுமல்லாமல் சிக்கலானதும் கூட என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று கூறினார்.
இலங்கை மக்கள் தங்களது வாழ்க்கையின் கடுமையான காலக்கட்டத்தை கடக்க இந்தியா உதவ நினைக்கிறது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.