சென்னை: அரசுப் போக்குவரத்து கழகம் இனி தனியார்மயமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு திமுக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் தனியாரை நுழைத்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதுமிருந்தால் திமுக அரசு அதைக் கைவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.