OPS files petition in Election commission demand to reject EPS selection: அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுக்குழுவில் கட்சி விதிகள் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.
மேலும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு, பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகள் திருத்தம் போன்றவை குறித்து தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மின்னஞ்சல் வழியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: கடைசி முயற்சியும் தோல்வி; வெளியேறிய ஓ.பி.எஸ்; பொதுச்செயலாளரான இ.பி.எஸ்
இதற்கு பதிலடியாக அ.தி.மு.க பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் அளித்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.