ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற 2500-க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் திரண்டதால் அவர்களுக்கு டோக்கன் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
1,600 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்ததை அடுத்து 2500 பேர் திரண்ட நிலையில், நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததால், டோக்கன் கிடைக்காதவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனைவருக்கும் டோக்கன் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். ஜாமினில் வந்துள்ள ஆருத்ரா நிறுவன இயக்குனர் ராஜசேகர், 100 சதவீதம் பணம் திரும்பத் தரப்படும் என ஆடியோ வெளியிட்டுள்ளார்.