இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. லண்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 76, ஷிகர் தவான் 31 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.