லண்டன்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா, 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
111 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 76 ரன்கள் எடுத்தார்.
இரு அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி வரும் 14-ஆம் தேதி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.